Phone: +94 21 222 3610 Email: info@maco.jfn.ac.lk
Phone: +94 21 222 3610 Email: info@maco.jfn.ac.lk

Application for Diploma in Micro Finance (நுண்நிதியியல் டிப்ளோமா கற்கைநெறி – அணி – VI )

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – இலங்கை
முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம்

நுண்நிதியியல் டிப்ளோமா கற்கைநெறி – 2022/2023 (அணி – VI)

முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடத்தினால் நடாத்தப்படும் நுண்நிதியியல் டிப்ளோமா கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து கோரப்படுகின்றன.

கற்கைநெறிக்கான காலம் : ஒரு வருடம் (இரண்டு அரையாண்டுகள்) வார இறுதி நாட்கள்

கற்பிக்கப்படும் மொழி: தமிழ்

விண்ணப்பிப்பதற்கான தகுதி:

விண்ணப்பதாரி கீழ்வரும் தகுதிகளில் ஏதாவது ஒன்றினைக் கொண்டிருத்தல் வேண்டும்.

  • க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 03 பாடங்களிலும் சித்திகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
  • தேசியத் தொழில்தகைமை மட்டம் – 4 இனை நிறைவுசெய்திருத்தல் வேண்டும்.
  • க.பொ.த சாதாரணப் பரீட்சையில் 06 பாடங்களிலும் சித்திகளைப் பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் நுண்நிதியியல் துறையில் இரண்டு வருட அனுபவத்தினை கொண்டிருத்தல் வேண்டும்.

கற்கைநெறிக்கான முதலீடு – ரூபா 42,500

கட்டண விபரம் :

  • அனுமதிப்பத்திரக்கட்டணம் – ரூபா 1,000
  • பதிவுக்கட்டணம்/ புதுப்பித்தல் கட்டணம் – ரூபா 2,000
  • கல்விக் கட்டணம் – ரூபா 35,000
  • பரீட்சைக் கட்டணம் – ரூபா 4,000
  • நூலகக் கட்டணம் (திரும்பப் பெறத்தக்கது) – ரூபா 500
  • மொத்தம் – ரூபா 42,500

விண்ணப்ப முடிவுத் திகதி: 02-02-2024

விண்ணப்பிக்கும் முறை:
முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிகழ்நிலை விண்ணப்பத்தினூடாக விண்ணப்பம் செய்யலாம்.

[fruitful_btn link=”https://www.maco.jfn.ac.lk/wp-content/uploads/2023/04/DMF-Payment-slip.pdf” target=”_blank” icon=”fa fa-chevron-right” icon_search=”fa fa-chevron-right” id=”ff-btn-644b53db3e706″ size=”mini” color=”default” text_color=”#fff” radius=”4″ type=”button” state=”active”]PAYING IN VOUCHER[/fruitful_btn]

[fruitful_btn link=”https://forms.gle/UYZEPSdBfEKSQkbP6″ target=”_blank” icon=”fa fa-chevron-right” icon_search=”fa fa-chevron-right” id=”ff-btn-644b53db3e706″ size=”mini” color=”primary” text_color=”#fff” radius=”4″ type=”button” state=”active”]Application[/fruitful_btn]

 

மேலதிக தொடர்புகளுக்கு : 021 222 3610

பதிவாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்